மாமனாரை இயக்கிய இயக்குநர்! இப்ப மருமகனிடம் வருகிறார்! குஷியில் ரசிகர்கள்!

585

விஜய்சேதுபதி நடித்த பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். தனது வித்தியாசமான கதைக்களத்தினாலும், இயக்கத்தினாலும் அனைவரின் மனதையும் இழுத்த கார்த்திக், ஜிகர்தன்டா படத்தின் மூலம் உச்ச இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என்ற மாஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ரஜினி தனது பழைய பாணியில் நடித்திருந்தது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இவர் அடுத்து யாரை வைத்து படம் இயக்க உள்ளார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வெய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளது.

அதில், வெய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.