தனுஷ் க்கு இவ்வளவு படமா?

620

பொதுவாக தமிழ் சினிமா நடிகர் ல விஜய் சேதுபதி தான் ஒரு வருடத்தில் நான்கு ஐந்து படங்கள் நடித்து வெளியிடுவார். கடந்தாண்டு ஜுங்கா, செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96 , சீதக்காதி போன்ற படங்களை திரைக்கு கொண்டு வந்தார். அந்த வரிசையில் நடிகர் தனுஷ் ம் நானும் நாலு படம் நடிக்குறனு அவரோட எண்ணிக்கைய கூட்டிருக்காரு. அதன் படி தனுஷ் ன் அடுத்தடுத்த படங்கள் என்ன?  பார்ப்போம்

கடந்தாண்டு வடசென்னை, மாரி 2 படங்கள் நடித்தார் தனுஷ். அது தொடர்ந்து 2019 ம் ஆண்டில் வடசென்னை 2 படம் காத்திருப்பில் இருக்கையில் வெற்றிமாறன் தனுஷ் அ வெச்சு இன்னொரு படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த படத்துக்கு ‘அசுரன்’ என்று பெயரும் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஐயும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் படபிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் முடிந்ததும் வடசென்னை 2 பாகம் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

dhanush film in 2019

 

அதனை தொடர்ந்து   சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரு படம் 2018 ல் மிகப் பெரிய வெற்றி படமான ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் உடன் நடிக்க வுள்ளார். இந்த படத்திற்கு விவேக் , மார்வின் இசையமைக்கவுள்ளனர் என படக்குழு அறிவித்தது. அதன் பின் அதே நிருவனத்தில் அடுத்த படமாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் முன்னதாகவே தனுஷ் உடன் கொடி படத்தை தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sathya jothi film

அதன் பின் ஏற்கனவே வெளியீட்டிற்கு காத்திருக்கின்ற , கவுதம் வாசுதேவ் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா இந்தாண்டு உறுதியாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2019ன் அரை ஆண்டிற்கு பின் மாதம் ஒரு  தனுஷ் திரைப்படம் வெளியாகும் எனலாம். தனுஷ் ரசிகர்களுக்கு தொடர் விருந்து காத்திருக்கின்றன

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of