முரளிதரனாக நடிக்க இருந்த இன்னொரு பிரபல நடிகர்.. ஷாக்கிங் தகவல்..

1825

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 800 என்ற பெயரில் எடுக்கப்பட இருந்தது. இதில், விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக முரளிதரன் பேசியதாக கூறி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனால், அப்படத்தில் விஜய்சேதுபதி விலகினார். இந்நிலையில் புதியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 800 படத்தின் கதை முதலில், நடிகர் தனுஷிடம் தான் சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தில் நடிக்க தனுஷ் மறுத்துவிட்டாராம்.

மேலும், முரளிதரனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, டிஜே-வும், கருணாஸ் மகன் கென்னும் அனுகப்பட்டனர். அவர்களும் அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனராம். இதுதொடர்பான தகவல் இணையத்தில் உலா வந்துக்கொண்டு வருகிறது.

Advertisement