6 மில்லியன் வியூஸ்களை கடந்த தனுஷின் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல்

406

தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘கர்ணன்’ படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.  ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார்.  தீப்பொறியுடன் தனுஷ் புகைப்படத்தை சுவற்றில் வரைந்து கொண்டே பாடல் பதிவு செய்த காட்சி வித்தியாசமானதாகவும் கிரியேட்டிவிட்டியாகவும் இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்த பாடல் யூடுயூபில் 6 மில்லியன் வியூஸ்களை கடந்ததுள்ளது.

Advertisement