சீனாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறும் தனுஷின் வடசென்னை

744

விசாரணை படத்தின் வெற்றிற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கியுள்ள படம் வடசென்னை. இதில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகியிருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகம் அக்டோபர் 17ந் தேதி வெளியாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வடசென்னை படக்குழுவினர் வெளியிட்ட டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதால் படத்திற்க்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதனிடையே சீனாவில் நடைபெறவிருக்கும் பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை படம் திரையிட தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி அக்.20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவின் 3-வது நாளில் வடசென்னை படம் திரையிடப்படவுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of