மீண்டும் காப்பியடித்த விவகாரத்தில் சிக்கிய முருகதாஸ் படம்!

875

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அர்னால்டு நடித்த ஹாலிவுட் படமான கில்லிங் கன்த்தர் போஸ்டரை காப்பியடித்து தர்பார் படத்திற்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தர்பார் பட போஸ்டரை வின்சி ராஜ் டிசைன் செய்தார். அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, காலா, கபாலி ஆகிய படங்களை அடுத்து ரஜினிகாந்த் சார் படத்தில் 3வது முறையாக பணியாற்றுவதற்கு கொடுத்து வைத்துள்ளேன் என்றார். நான் சூப்பர் ஸ்டார் ரசிகன்.

அவர் பட போஸ்டரை டிசைன் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பொறுப்புடன் தானே வேலை பார்ப்பேன். நான் நேர்மையாக உருவாக்கிய போஸ்டரை வேறு ஒரு போஸ்டரில் இருந்து காப்பியடித்தேன் என்று கூறுவது கவலை அளிக்கிறது என்று வின்சி ராஜ் தெரிவித்துள்ளார்.

அந்த ஹாலிவுட் பட போஸ்டரை நான் தற்போது தான் முதல் முறையாக பார்த்தேன். என் போஸ்டரை கலாய்ப்பவர்கள் ஹாலிவுட் போஸ்டருடன் ஒத்துப் போகும் வகையில் அதன் நிறத்தை மாற்றியுள்ளனர் என்கிறார் ராஜ்.

போஸ்டர் காப்பி என்று கலாய்த்தவர்கள் இது மட்டும் தானா இல்லை கதையுமா என்று கேலி செய்தார்கள். இந்நிலையில் வின்சி ராஜ் விளக்கம் அளித்துள்ளார். ரஜினி தற்போது மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of