சிறுவனை சாதி பெயர் சொல்லி மலம் அள்ள வைத்த இளைஞன்..!

482

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், அருகே உள்ள கோடாரம்பட்டி கிரமாத்தை சேர்ந்த 15 வயது சிறுவன்.

அங்கு அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். இவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். கடந்த 15ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு மறைவான காட்டில் மலம் கழிக்க சென்றுள்ளான்.இதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர். அந்த மாணவனின் சாதி பெயரை சொல்லி கடுமையாக அவனை தீட்டி அவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த மாணவனை மலத்தை கையல் அள்ளி கொண்டுபோக வைத்துள்ளதாக அந்த மாணவனின் பொற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதே போல் ராஜசேகர் மாணவனின் பொற்றோர் என்னை தாக்கியதாகவும் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement