நீட் தேர்வு..! இன்று மேலும் ஒரு மாணவன் தற்கொலை..! அதிர்ச்சி தகவல்..!

532

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவன் ஆதித்யா. 20 வயதாகும் இவர், நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், ஆதித்யாவின் தாயார் சொந்த விஷயம் காரணமாக, சேலம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த ஆதித்யா, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே, நீட் தேர்வு பயத்தால், அரியலூரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற மாணவனும், மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவியும் தற்கொலை செய்துள்ள நிலையில், தற்போது இன்னொரு மாணவனும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் இதுபோன்று தொடர்ந்து தற்கொலை செய்துக்கொள்வதால், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.