“வருது வருது விலகு விலகு..” தர்பார் மாஸ் அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

320

தமிழில் முக்கியமான இயக்குநர்களின் பட்டியல்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் ஒருவர். இவர் அடிக்கடி கதை திருட்டுப்பிரச்சனையில் சிக்குவார். ஆனால் அது வேறக்கதை.

சரி வாங்க நம்ம நியூஸ்க்குள்ள போகலாம். ஏ.ஆர்.முருகதாசோடு அடுத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோட தாங்க. தர்பார்-னு இந்த படத்துக்கு பேர் வச்சி இருக்காங்க. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இந்த படத்துல, நடிகை நயன்தாரா உட்பட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரிலீசான நிலையில், செகன்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதன் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து டுவீட் போட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.