தர்ஷன் காதலுக்கு சோகமான கிளைமேக்ஸ்..,? “ஷெரின் எல்லாம் உங்க கையில தான்..,!”

571

பிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் தொடங்கி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களில், தர்ஷனுக்கு பொதுமக்களிடையே மரியாதை உள்ளது.

அவரைத் தான் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களும் தனக்கு போட்டியாகவும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இலங்கை மாடலான தர்ஷன், நடிகை ஷெரினிடம் ஆரம்பத்திலிருந்து நெருக்கம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தர்ஷனின் காதலி என்று கூறப்படும் சனம் ஷெட்டி, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“நான் துரதிருஷ்டசாலி. இன்னமும் நான் தர்ஷனை ரொம்பவே காதலிக்கிறேன். மனது வலிக்கிறது. என்ன செய்ய? அவரைச் சொல்லி தப்பில்லை. எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல், ஒரே முகங்களைப் பார்த்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.

அதனால் கூட ஷெரீனைக் காதலிக்கத் தோன்றியிருக்கலாம். ஒருவேளை தர்ஷனுக்கு ஷெரீன் மீது காதல் வந்திருந்தால், அதை என்னிடம் வெளிப்படையாகச் சொன்னாலே போதும். நான் அவர்களை வாழ்த்தி விட்டு ஒதுங்கி விடுவேன். தர்ஷன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.”

இவ்வாறு அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால் தர்ஷனின் காதலுக்கு சோகமான கிளைமேக்ஸ் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நல்ல கிளைமேக்ஸ் வருமா அல்லது சோகமான கிளைமேக்ஸ் வருமா என்பது ஷெரின் கையில் தான் உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.