‘தல’ தோனி-யின் சிக்ஸர் சாதனை..,

718

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் தோனி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அவர் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்தி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதையெல்லாம், தவிடுபொடி ஆக்குவது போல் நேற்றைய போட்டியில் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என அதிரடியாக 40 ரன்களை விளாசினார்.குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர் டிஆர்சி ஷார்ட் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரை, எதிர்கொண்ட தோனி மிட் விக்கெட் திசையில் சிக்சரை பறக்கவிட்டார்.

இதன் மூலம் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் 350 வது சிக்சரை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனைய படைத்தார்.இதைத் தவிற, சர்வதேச டி20 போட்டிகளில் 50வது சிக்சரை அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இருப்பினும் இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of