தோனியின் அடுத்த கட்ட பிளான் என்ன..? பிளானை வெளியிட்ட தோனியின் மனைவி

2015

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் தற்போது ஐ.பி.எல்.போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டி முடிந்த பின் சினிமா துறையை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அந்த நிறுவனத்தின் சார்பில் ஒரு சில டாக்குமெண்டரி படங்களை எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வருங்காலங்களில் வெப் தொடர் ஒன்றை தயாரிப்பதாக தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் சாகஷி அதாவது தோனியின் மனைவி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வெப் தொடர்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகை பெயர்களை பின்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கீழ் ஒரே நேரத்தில் 5 புதிய வெப் தொடர்களைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சாக்‌ஷி தோனி கூறியுள்ளார்.