தோனி அணியை வழி நடத்தும் வெளிச்சத்தை போன்றவர்: ரோஹித் சர்மா

465

இதில் டெஸ்ட் போட்டியை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்த நிலையில் ஒரு நாள் போட்டிகள் துவங்க உள்ளன.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மா பேசும்போது தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

 

இதில் ரோஹித் பேசும்போதும், “தோனி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து அணியை வெற்றிகரமாக வழி நடத்தி இருக்கிறார்.

தோனி இருக்கும்போது அணியில் ஒரு நிதானம் இருக்கும்.  குறிப்பாக ஸ்டெம்புக்கு பின்னால் இருந்து பல உதவிகளை செய்திருக்கிறார்.

பல வருடங்களாக நாங்கள் தோனியுடன் களத்திலும், வீரர்கள் அறையிலும் இருந்து வருகிறோம்.

தோனி அணியை வழி நடத்தும் வெளிச்சத்தை போன்றவர். அதுமட்டுமல்லாது தோனி பல போட்டிகளில் இறுதியாக களமிறங்கி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.

சாஹல், குல்தீப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும்போதும் பல ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்” என்றார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of