‘தல’ தோனியை தலைதெறிக்க ஓட விட்ட சாஹல்- வைரல் வீடியோ

773

எத்தனையோ பேட்டிகளை எளிதில் எதிர்கொண்டு தன்னுடைய
நய்யாண்டி தனமான பேச்சால் அணைவரையும் சிரிக்க வைத்த தல
தோனி, சாஹலின் பேட்டியை தவிர்ப்பதற்கு ஓடிச்சென்ற காட்சி
இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைப்பெற்ற 5
வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில்
வென்று 4-1 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கிக்கொண்டது.

போட்டி முடிந்த பின் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் நின்று
கொண்டிருந்த போது சாஹல் தன்னுடைய இணையதள டிவிக்காக
தோனியை பேட்டி எடுக்க சென்றார்.

ஆனால் அவர் வருவதை கண்ட தோனி, இந்த பேட்டியை தவிர்க்க
மைதானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் ஓடினார், சாஹலால்
அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் நின்று விட்டார்.

பின் தோனி டிரஸ்ஸிங் அறைக்கு சென்று சாஹல் எடுத்த மற்ற
வீரர்களின் பேட்டியை கண்டார்.