டோனி ஓய்வு பெறாவிட்டால் அவ்வளவு தான்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

1748

இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக நுழைந்து, பின் கோப்டனாக உருவெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் கேப்டனாக இருந்த போது, 20-20 ஒவர் உலகக்கோப்பையும், ஒரு நாள் போட்டி உலகக்கோப்பையும் வென்று பெறுமை சேர்த்தவர்.

38 வயது உள்ள டோனி, இந்த உலகக்கோப்பை போட்டியோடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் சோகமாக பதிவுகளை வெளியிட்டு வந்த நிலையில், டோனி ஓய்வு குறித்து எதுவும் என்னிடம் சொல்லவில்லை என்று, கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் டோனி ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை என்றால், அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அறிந்த டோனியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of