கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..! ராணுவப்படையில் பணி..,? பிசிசிஐ-யின் அதிரடி அறிவிப்பு..!

1228

உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்தே, கிரிக்கெட்டில் இருந்து பிரபல நட்சத்திர வீரர் எம். எஸ். தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற தகவல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்தச் சூழலில், தற்போது எம். எஸ். தோனி, செப்டம்பர் மாதம் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2 மாத காலம் ஓய்வு எடுக்கப்போவதாக கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்த தோனி, தாம் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் துணை ராணுவப் படையில், அடுத்த 2 மாதங்களுக்கு பணியாற்றப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தோனி தெரிவித்ததை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள கிரிக்கெட் வாரியம், அதுவரை தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடமாட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, நாளை நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வில், தோனிக்கு வாய்ப்பு இல்லை என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனியின் இந்த 2 மாதக் கால ஓய்வு, அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும் என்பது நிதர்சனம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of