மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி – நெகிழ்ச்சியடைந்த ரசிகர் ! – வைரலாகும் வீடியோ

672

நாக்பூர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் தோனி ஓடி பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, 2வது பாதியில் பந்து வீசுவதற்காக இந்திய அணி களமிறங்கியது. அப்போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தோனியை தொட முயன்றார்.

அப்போது ரசிகரின் கையில் சிக்காமல், வீரர்கள் பின்னால் ஒளிந்தும், ஓடி ஆடியும் விளையாட்டு காண்பித்த தோனி ஒரு கட்டத்தில் ரசிகரை கட்டியணைத்து நெகிழ்ச்சி அடையச் செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of