சக வீரர்களுக்கு விருந்தளித்த தோனி.., காரணம்?

218

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

3-வது போட்டி நாளை ராஞ்சியில் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த தோனிக்கு சொந்த ஊராகும். இங்கு அவருக்கு சொந்தமான ரெஸ்டாரன்ட் உள்ளது.இந்திய வீரர்கள் ராஞ்சி போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு தோனி தனது ஓட்டலில் இரவு விருந்து அளித்தார்.

விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் சாஹல் ஆகியோர் படத்தை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளனர்.