ரோந்து பணியில் களமிறங்கும் கவுரவ லெப்டினன்ட் கர்னல் தோனி

881

உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஆகஸ்ட் 3ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டது. மேலும் டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் டோனி, தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

டோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் டோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of