களமிறங்காமல் டுவிட்டரை கலக்கிய தல ‘தோனி’

355

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியா அணி 48 வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றியை தன்வசமாக்கினர்.

இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், பீல்டிங் மற்றும் பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. அதுமட்டுமின்றி, ரிஷப் பண்ட்டின் படுமோசமான கீப்பிங் கூட ஒன்று .

இந்தப் போட்டியில் தோனி விளையாடததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்த சமயத்தில் இந்த நிகழ்வுகள் தல தோனியை மிஸ் செய்த ரசிகர்கள் தோனி… தோனி… என்று தல பெயரை சொல்லி மொஹாலி மைதானத்தையே அதிர வைத்தனர்.

அதுமட்டுமின்றி ஆத்திரம் தீராத ரசிகர்கள் தோனியின் இழப்பை வெளிபடுத்தும் வகையில் அவர் பெயரை ட்விட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். நேற்று இந்திய அளவில் 3 வது இடத்தில் தோனியின் பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.