கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு..? அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்..!

793

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் முக்கியமான ஒருவர் தோனி. தமிழ் மக்களால் செல்லமாக தோனி என்று அழைக்கப்படுபவர். இவர் கேப்டனாக இருந்த போதும் சரி, பேட்ஸ்மேனாக இருந்த போதும் சரி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

டோனி கீப்பிங் செய்தால் கிறீசை விட்டு தாண்டாதே என்று ஐசிசி டுவீட் போட்டது. அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் தீவிரமாக இருப்பவர் தல டோனி. இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு டோனி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

இதில், தன்னுடைய ஓய்வு குறித்து தோனி அறிவிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  மேலும் விராட் கோலியும் தனது டுவிட்டர் பக்கத்தில், டுவீட் போட்டுள்ளார்.

அதில், “அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்” என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் இவ்வாறு கூறியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement