‘தல’ எப்போது கிரிக்கெட்டுக்கு குட்பாய் சொல்ல போகிறார்..? பயிற்சியாளர் அதிரடி

412

2019ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரோடு, இந்திய வீரர் ‘தல’ தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தல’ தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு அவரது பள்ளிப்பருவ பயிற்சியாளர் கேசவ் பானர் பேசுகையில், “தோனி, எந்த அளவிற்கு ஃபிட்டாக இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும். இதனால், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் என யாருக்கும் தெரியாது.

ஏன் அவரது மனைவி, தந்தைக்கும் கூட இது தெரியாது” என புன்னைகையுடன் பதிலளித்தார்.37 வயதான தோனி, இந்திய அணிக்காக இதுவரை 90 டெஸ்ட், 341 ஒருநாள், 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2007இல் டி20 உலகக் கோப்பை, 2011இல் உலகக் கோப்பை ஒருநாள் தொடர், 2013இல் சாம்பியன்ஸ் டிராஃபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் என மூன்று விதமான கோப்பைகளையும் வென்றது.முன்னதாக, 2014 டிசம்பர் மாதத்தில் தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எந்தவித முன் அறிவிப்பின்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of