15 நாள் ராணுவ பயிற்சி நிறைவு – தோனியின் அடுத்த மாஸ்டர் பிளான்…

1236

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்15 நாள் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது.

இந்திய ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமெண்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனிக்கு 15 நாட்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் விக்டர் படையுடன் இணைந்து ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை தோனி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து, சுதந்திர தினத்தை இந்திய ராணுவத்தினருடன் லடாக் மற்றும் சியாச்சென் பகுதிகளில் தோனி கொண்டாடினர்.

இந்நிலையில் அவரது 15 நாள் ராணுவ பயிற்சி நிறைவடைந்தது. இந்நிலையில், அவர் லடாக்கின், லே விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அடுத்து நடைபெற இருக்கும் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாட தோனி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement