பிரதமர் நிகழ்ச்சியை ஒளிபரப்பாத பெண் சஸ்பெண்டு..! தொலைக்கட்சியின் தலைமை அதிகாரி அதிரடி..!

350

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா கடந்த 30-ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மிகவும் சிறப்பானது என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து, உதவி இயக்குனர் வசுமதியை சஸ்பெண்டு செய்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of