டிராபிக் ஜாம் ஆயிடுச்சா..? தீர்வு உங்க கையிலேயே இருக்கு..! இத மட்டும் பண்ணுங்க..!

241

எங்கு போனாலும், இதை மட்டும் நீங்க சந்திக்காம இருக்கவே முடியாதுங்க. அட ஆமாங்க, போக்குவரத்து நெரிசல தான் சொல்றேன். யாரோ ஒருத்தர் பண்ண தப்புக்கு, ஒரு கூட்டமே வெயில்ல நிக்க வேண்டி இருக்கும்.

சில சமயங்கள்ள எதுக்காக டிராபிக் ஜாம் ஆச்சுனே தெரியாத அளவுக்கு, டிராபிக் ஜாம் ஆகியிருக்கும். இந்த பிரச்சனைய ஓட்டுநர்களே புரிந்துக்கொண்டு வழிவிட்டுட்டு போனா தான், டிராபிக் கிளயர் ஆகும். இந்த மாதிரி அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுவதால, வேலைக்கு போறவங்க, ஸ்கூல் போறவங்கன்னு பெரிய கூட்டமே பாதிக்கப்படும்.

இந்நிலையில் இந்த மாதிரி புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல்ல மாட்டிக்கிட்ட ஒருத்தர், நெரிசலுக்கான காரணங்களை தெரிவித்து கவர்னருக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்த கவர்னர் கிரண்பேடி, அவரது சமூக வலைதள கணக்கில் இருந்து பதிவு ஒன்றை போட்டார்.

அதில், முக்கிய சிக்னல்களிலும், மற்ற சிக்னல்களிலும் போக்குவரத்து நிலவரம் தொடர்பான தகவல்களை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்களை, 1031 என்ற எண்ணுக்கும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of