ஸ்டாலின் சோஷியல் மெடிசன் படித்துள்ளாரா? – அமைச்சர் ஜெயக்குமார்

248

மின் கட்டண உயர்வு குறித்து போராட்டம் அறிவித்துள்ள திமுக, தங்களது ஆட்சியில் மக்கள் இருட்டிலேயே வாழ்ந்ததை நினைத்து பார்க்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகள் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனாவை தடுக்க அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக தான் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முன்பைவிட பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார்.

கொரோனா சமூக பரவலாக ஆகியுள்ளதாக என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர் ஆகியவை தான் கூற வேண்டும் என்றும் இதுகுறித்து கூற திமுக தலைவர் ஸ்டாலின் சோஷியல் மெடிசன் படித்துள்ளாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் 3 நாட்களாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக கூறினார். முதலமைச்சர் கூறியது போல், 10 நாட்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement