இளம்பெண்ணை அரைநிர்வாணமாக்கி உறவினர்கள் செய்த செயல்..! – நடுரோட்டில் பயங்கரம்..!

1159

வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், அவரது உறவினர்களே அந்த பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி சாலையில் அடித்து அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்புர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் வீட்டை  விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு எந்தவித புகாரும் வராததால், வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.