”விநோத வழக்கு” விவாகரத்து கேட்ட கணவன்! குழந்தை கேட்ட மனைவி!

926

மும்பையை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், 2 வருடங்களாக தனது கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 2017-ம் ஆண்டு மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி, கணவன் விவகாரத்து மனு தாக்கல் செய்துள்ளார். அதற்கு பதிலடியாக தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு மனுக்களுமே விசாரணையில் உள்ள நிலையில், சட்டப்பூர்வமாக இன்னும் விவகாரத்து கிடைக்கவில்லை.

ஆனால், இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. கணவனின் பிரிவு காரணமாக, மனைவி தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில், ஒரு வித்தியாசமான மனு ஒன்றுடன் மனைவி மும்பை நந்டெட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த மனுவில், 2 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவருடன் உடலுறவு மூலமாகவோ அல்லது செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதன்படி, ஒரு பெண் தனது வாரிசை பெருக்கிக்கொள்ள நினைப்பது அவரது அடிப்படை உரிமைதான் என்று பல வழக்குகளில் தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி, இதற்கு பிரிந்துவாழும் கணவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், எந்த வகையிலும் தன்னால் உதவ முடியாது; விருப்பமும் இல்லை என்று கணவர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இறுதியில் பெண்ணின் கோரிக்கையை ஆதரித்து, செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெறுவது தொடர்பாக கணவர், மனைவி இருவரும் ஜூலை 24-ல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of