பக்தர்களின் காலணிகளை சுத்தப்படுத்தி நூதன பிரசாரம்.., பெண் கைது

344

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தெற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவில் அருகில் வீதியின் நடுவே ஒரு பெண் உட்கார்ந்து அந்த வழியாக வந்த பக்தர்களின் காலணிகளை கழற்றி, அதை துடைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பக்தர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அந்த வழியாக வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அப்பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அந்த பெண் சென்னை அண்ணாநகரை சேர்ந்த நர்மதா நந்தகுமார் என்பது தெரியவந்தது. அதற்குள் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினரும், திமுக-வினரும் திரண்டுவிட்டனர்.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், நர்மதா மீது பொதுஇடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவது, கொலைமிரட்டல் விடுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of