3 மதங்களும் இணைந்த புதுமை திருமணம்..! எப்படி தெரியுமா..?

325

கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து சம்பிரதாய முறைப்படி மேளதாளம் முழங்க, தாலிகட்டி திருமணம் நடைபெற்றது. இதில் 3 மதங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டதால் மதநல்லிணக்க திருமணமாக இருந்தது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர் அனில்குமார். இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஷேக் சோனிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஆனால் பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து கொல்லக்கூடத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து சேக் சோனி பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.

இந்துக்களின் முயற்சியால் திருமண கனவு நினைவானதை எண்ணி, மணமக்கள் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி அவர்களுடைய திருமணம் இந்து முறைப்படி மேளதாளங்கள் முழங்க, மாலை மாற்றி, தாலிகட்டி சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் வந்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.