கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவிக்க வாலிபரின் பலே பிளான்..! திடுக்கிட்ட போலீஸ்..!

984

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சித்தரேவு சாலை பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசி தீ விபத்து ஏற்படுத்தியிருப்பதை கண்டறிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ராஜாங்கம் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதலி இருக்கும் பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததாகவும், எனவே அவர்களை திசை திருப்ப மாங்காய் குடேனுக்கு தீ வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர், கள்ளக்காதலி வீட்டில் இரவு தங்கிவிட்டு, காலை விடிந்ததும் அங்கிருந்து சென்றதாகவும் ராஜாங்கம் வாக்குமூலம் அளித்தார். கள்ளக்காதலியை சந்திப்பதற்காக குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பட்டிவீரன்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement