காலி இருக்கைகளை பார்த்து வீர வசனம் பேசிய திண்டுக்கல் சீனிவாசனும், வேலுமணியும்.

725

மழை காரணமாக பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலைந்து சென்றதால், காலி இருக்கைகளை பார்த்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், வேலுமணியும் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினர்.
vo-vt
இலங்கை தமிழர்களை இனப் படுகொலை செய்ய உதவியதாக காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கண்டன பொது கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டம் ஆரம்பிக்கும் போதே மழை பெய்யத் துவங்கியது. இதனையடுத்து அமைச்சர்கள் பேசுவதற்கு முன்பே மக்கள் புறப்பட துவங்கினர். இதனையடுத்து ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாகியது. காலியான இருக்கைக்கு மத்தியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வேலுமணி ஆகியோர் சுமார் ஓரு மணி நேரத்திற்கு மேலாக பேசினர்.

Advertisement