டோனி இந்திய அணிக்காக அதை பலமுறை செய்தார் | Dinesh Karthick

604

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி விளையாடிய ஒன்பது ‘லீக்’ ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது.

இந்த விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணியின் கேப்டனும், சர்வதேச வீரருமான தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்தில் 95 ரன்னும், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 28 பந்தில் 65 ரன்களும் குவித்து தனது அதிரடியை காண்பித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடைசி, கட்டத்தில் சில ஓவர்கள் இருக்கும்போது அதிரடியாக விளையாடி ரன் குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டோனி இந்திய அணிக்காக பல ஆண்டுகள் இதை செய்து இருக்கிறார். அவரையை நானும் பின்பற்றுகிறேன் என்று கூறினார்.

Advertisement