போட்டியை பார்த்ததால் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக் | Dinesh Karthick

330

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுதான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியின் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்.

இரண்டு அணிகளுக்கும் பிராண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் போட்டியை பார்த்தார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு பிரிமீயர் லீக் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என அவரிடம் விளக்கம் கேட்டது பிசிசிஐ.

இந்நிலையில் பிசிசிஐ-யிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.