இந்த “டீஷர்ட்” போட்டது ஒரு குத்தமாய்யா..? – தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ

944

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திற்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ள தினேஷ் கார்த்திக், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார்.


இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை அணிந்தபடி தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லத்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இருக்கும் இந்திய வீரர்கள், இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது விதிமீறல் என்பதால், தினேஷ் கார்த்திக்கிடம் உரிய விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐ,பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சொந்தமாக கொண்டுள்ள, நடிகர் ஷாருக் கான் கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்ற அணியை உரிமையாக கொண்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of