இவர்களுக்கு தான் வாக்களித்தேன்! பாரதிராஜா பளார் பதில்!

1697

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண் சார்ந்து, மக்கள் நலன் சார்ந்து, மொழி சார்ந்து கனிம வளங்கள் களவு போகாமல் இருப்பதற்காக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்கு வாக்களித்துவிட்டு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of