ரகசிய அறையில் இருக்கிறார் இயக்குனர் சேரன்

439

பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் எல்லாம் தங்கள் வெற்றிக்காக மல்லுக்கட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த எவிக்ஷனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் சேரன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.

ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து ஒரேயடியாக வெளியே அனுப்பப்படாமல் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே, ஹவுஸ்மேட்சின் நடவடிக்கைகளை அவர் கவனித்து வருகிறார்.

இன்னும் இரு தினங்களில் சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார். இந்த இரண்டு நாட்களில் கவனித்த விஷயங்களை வைத்து அவர் ஆட்டத்தை ஆரம்பிப்பார். எனவே தற்போதைய நிலையில் சேரன் காப்பாற்றப்பட்டதாகவே தெரிகிறது.

சீக்ரெட் ரூமில் இருப்பதால் இந்த வார நாமினேசனிலும் சேரன் பேர் வராது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of