யார் இந்த மகேந்திரன்? – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்

1461

புகழ் வாய்ந்த தமிழ்த்திரை இயக்குநர்களுள் ஒருவரான மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில், இலையங்குடி என்கிற ஊரில் ஜோசப் செல்லையா – மனோன்மணி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

இவரது இயற்பெயர் அலெக்சாண்டர்.  மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் வாய்ந்ததாக அமைந்தது.

Related image

மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் என்ற  நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.

திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.

இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அவர் எழுதிய சினிமாவும்,நானும் என்னும் நூல் 2004ஆம் ஆண்டு வெளியானது.

Related image

திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ள மகேந்திரன், ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் ரஜினியே ஆவார்.

Image result for மகேந்திரன்

மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.

கன்னட நடிகை அஸ்வினியை உதிரிப் பூக்கள் என்னும் தமிழ் படத்தில்  அறிமுகம் செய்தவர் மகேந்திரன். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகத்தால் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தார்.

Image result for மகேந்திரன்

கமலஹாசனின் சகோதரர் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒருகன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.

Image result for மகேந்திரன்

விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.

மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. ’’நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார்.

(பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)

Image result for மகேந்திரனுடன் கமல்

தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.

Related image

இப்படி தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த இயக்குனர் மகேந்திரன் 45 க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து வெற்றி கண்டவர். இவர் சமீபத்தில் வெளியாக தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

theri mahendiran

தமிழ் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை பதியவைத்த இயக்குனர் மகேந்திரன் 2019 ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று காலமானார்.

அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு என்றால் அது மிகையல்ல…

  • – எழுதுகோல் கர்ஜனை
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of