உதிரி பூக்கள், முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் காலமானார்

532

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  இவரின் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படங்கள் என்று சில உண்டு. அந்த வகையில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

தந்தையின் மறைவை மகன் ஜான் மகேந்திரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of