இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

299

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.

இவர் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு உள்ளிட்ட படங்கள் மேலும் பிசாசு திரைப்படம் மூலம் ஒரு பேய்யையும் காதலிக்க வைத்தார். இப்படம் இவரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாளை கொண்டாட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணி ரத்னம், வெற்றிமாறன், ஷங்கர், கௌதம் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் ஒன்றிணைத்து கொண்டாடியுள்ளனர்.

மேலும் பிசாசு 2 ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகவுள்ளது. ஆம் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மிஷ்கினின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.

இயக்குனர் மிஷ்கினின் பிறந்த நாள் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அந்த புகைப்படங்கள் இதோ..