இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை

222

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார்.

இந்தப் படத்தில் ஆளுங்கட்சியின் இலவச திட்டங்களை விமர்சித்திருப்பதாகக் கூறி, ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேவராஜன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்நிலையில் தனக்கு முன் ஜாமின் அளிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நாளை வரை முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று, வழக்கை ஒத்தி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here