“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..!

347

நடிகர் விஷால், பிரசன்னா உட்பட பலரும் நடித்த திரைப்படம் துப்பறிவாளன். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால், அப்போது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், இந்த திரைப்படத்தை நடிகர் விஷாலே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாட்டிற்கு, மிஷ்கின் அதிகமாக சம்பளம் கேட்டதே காரணம் என்று தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து மிஷ்கினிடம் கேட்டதற்கு, விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை என்றும், உண்மையில் அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன் என்றும் அவர் நக்கலாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதற்கு ரூ.100 கோடி செலவாகி உள்ளது. மீதி காட்சிகளை படமாக்க ரூ.400 கோடி தேவை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சியை எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூ.100 கோடி செலவாகும். எனவேதான் மொத்தமாக அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of