“சைக்கோ படத்தில் ஒரு கூந்தலும் இல்லை..” தன் மானத்தை தானே வாங்கிய மிஷ்கின்..

359

பெண் இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பாரம் என்ற திரைப்படம், தேசிய விருது பெற்றுள்ளது. இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் இந்த திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மிஷ்கின், ரசிகன் ஒருவர் தனது சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்தாக தெரிவித்ததாகவும், ஒரு தடவைக்கு மேல் பார்க்க அந்த படத்தில் ஒரு கூந்தலும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்தால், அவருக்கு வேறு வேலை இல்லை என்றும், அவரை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்றும் மிஷ்கின் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of