ரமணாவும் திருட்டுக்கதை..? ஒரே திருட்டுக் கதையா இருக்கே..? திடீரென கிளம்பிய சர்ச்சை..!

1991

கடந்த 2002-ஆம் ஆண்டு அன்று விஜயகாந்த் நடிக்க, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ரமணா. இதுவரை இல்லாத கதையம்சத்துடனும், திரைக்கதையுடனும் வெளிவந்து, கேப்டனை வேற ஒரு டைமன்சனில் காட்டிய படம் ரமணா.

இந்த படத்தில் வரும், மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை என்ற வசனம் இன்றளவும் பலரால் பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படம், கேப்டனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான திரைப்படம். ஆம், இந்த படத்தை தொடர்ந்து தான் கேப்டன் அரசியல் வாழ்க்கையில் இறங்கத் தொடங்கினார்.

இந்த படம் வெளியாகி 17 வருடம் கழித்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. கேப்டனின் தென்னவன் பட இயக்குநர் நந்தகுமார் பிரபல யுடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ரமணா தன்னுடைய கதை என்றும், ஆசான் என்ற தன்னுடைய கதையை ரமணா என்று எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக எழுந்த பிரச்சனையின் காரணமாக தான், கேப்டன் தனக்கு தென்னவன் பட வாய்ப்பபை அளித்தார் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கத்தி, சர்கார் ஆகிய படங்கள் திருட்டுக்கதை புகாரில் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாசின் மாஸ்டர் பீசான ரமணாவும் திருட்டுக்கதை என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கஜினியும், பிரபல ஆங்கில பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டே படத்தின் கதை என்றும் கூறப்பட்டு வருகிறது. அப்ப தீனாவாவது அவரது சொந்தக்கதையா என்று நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர், துப்பாக்கி யாருடைய கதை என்றும், ஏழாம் அறிவு யாருடைய கதை என்றும் விளாசி வருகின்றனர்.

Advertisement