நீட் தேர்வால் மாணவி தற்கொலை.. தமிழக அரசை கேள்வி கேட்கும் பா.ரஞ்சித்..

578

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மதுரையை சேர்ந்த மாணவி ஸ்ரீ-துர்கா இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்தக்தில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழக அரசு இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், Im tired, Ban NEET, Save TN Students என்ற ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement