“அஸ்க லிம்டா..” காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்..! வைரமுத்து மகன் செய்த ஏற்பாடு..!

372

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படத்தில் நடித்த பாகுபலியை கூட நம் மறந்து விடுவோம். ஆனால், அதில் இடம் பெற்ற காலகேயர்களையும், அவர்கள் பேசும் மொழியையும் நம் மறக்கவே முடியாது.

இன்றைய அளவில் கூட, காலகேயர்களின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் பரப்பப்பட்டு வருகிறது. இந்த மொழியை, பாகுபலி திரைப்படத்திற்காகவே, வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி கண்டுபிடித்தார்.

இந்நிலையில் இந்த மொழியை, உலக தாய்மொழி தினமான இன்று இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், இந்த மொழிக்கு கிளிக்கி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of