விஜயின் அரசியல் நகர்வு.. முக்கிய தகவலை வெளியிட்ட SAC…!

2157

கடந்த சில ஆண்டுகளாக விஜய் தனது திரைப்படங்களின் வழியாக அரசியல் பேசி வருகிறார். இதன்காரணமாக, அவர் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இதற்கிடையே, விஜயின் தந்தை டெல்லி பயணம் மேற்கொண்டார். பாஜகவில் இணைவதற்கான பயணமே இது என்று பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ளார்.

அதில், நான் பாஜகவில் இணையப் போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதே தங்கள் பிரதான நோக்கம் என்றும், தேவைப்படும்போது விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, மக்கள் அழைக்கும் போது விஜய் அரசியலுக்கு வருவார் எனவும் சந்திரசேகர் தெரிவித்தார்.

Advertisement