முத்தம் கொடுத்த தமன்னா! அல்வா கொடுத்த இயக்குநர்!!

888

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து தமன்னா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

‘கண்ணே கலைமானே காதல் கதை கொண்ட படம். நான் வங்கி அதிகாரியாக நடித்துள்ளேன். ஹீரோ உதயநிதிக்கு இணையான கதாபாத்திரம் என்னுடையது. படம் அருமையாக வந்துள்ளது.

முழு படத்தையும் பார்த்து அழுதுவிட்டேன். நான் நன்றாக நடித்துள்ளதாக சீனுராமசாமி என்னை பாராட்டினார். என் நடிப்பை பாராட்டி அவர் திருநெல்வேலி அல்வா கொடுத்தார். அந்த அல்வா எனக்கு மிகப் பெரிய பரிசாக இருந்தது. தர்மதுரை படத்தை போன்றே இந்த படத்திலும் எனக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. படம் சிறப்பாக வந்துள்ளதால் நான் சீனுராமசாமிக்கு முத்தம் கொடுத்தேன்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of