“அதுவா.. இதுவா..” அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..!

313

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து இயக்கிய வரும் இவர், சமீபத்தில் என்.ஜி.கே என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படம் தோல்வியடைந்ததையடுத்து, புதிய பட வேலைகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் செல்வராகவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, அவர் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுத தொடங்கியுள்ளாராம். இந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், அந்த கதை ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கானதா அல்லது புதுப்பேட்டை இரண்டாம் பாகத்திற்கானதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of