காற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..

4150

பல்வேறு பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிப்பிலும் ரசிகர்களை மயக்கியிருக்கிறார். அப்படி தான் காதலன் படத்தில், நடிகர் பிரபுதேவாவுக்கு தந்தையாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்து, உருக்கமான பதிவு ஒன்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

அதில், “வெகுசில பாடகர்களின் பாடல்கள் மட்டுமே, அது மக்களை காலம் கடந்து பேசும். அந்த விஷயத்தில் எஸ்.பி.பி. மாஸ்டர். நாம் அவரை இழந்துவிட்டோம். ஆனால் அவர் குரலை அல்ல.. அது என்றும் காற்றில் கலந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.